இந்த தம்பி தோனியவே மிஞ்சுடுவான் போலவே.. என்ன ஒரு சாமர்த்தியமான ஸ்டம்பிங்.. வீடியோவ பாருங்க அசந்துருவீங்க

Published : May 04, 2019, 04:46 PM ISTUpdated : May 04, 2019, 04:47 PM IST
இந்த தம்பி தோனியவே மிஞ்சுடுவான் போலவே.. என்ன ஒரு சாமர்த்தியமான ஸ்டம்பிங்.. வீடியோவ பாருங்க அசந்துருவீங்க

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே மிரட்டினார். 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அயர்லாந்துடன் ஒரு ஒருநாள் போட்டியில் ஆடியது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி வெறும் 198 ரன்கள் மட்டுமே அடித்தது. 199 ரன்கள் என்ற இலக்கை 42வது ஓவரில் எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே மிரட்டினார். இங்கிலாந்து அணி இலக்கை விரட்டுவதற்கு பென் ஃபோக்ஸ் தான் கைகொடுத்தார். 61 ரன்களை குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஒரு ஸ்டம்பிங் செய்தார். விக்கெட் கீப்பிங்கில் வல்லவரான தோனியையே மிஞ்சும் அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்தார். தோனி மின்னல்வேக ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். ஆனால் பென் ஃபோக்ஸோ, பேட்ஸ்மேன் காலை தூக்குவார் என்று தெரிந்து, அவர் காலை தூக்கும் வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்தார். அயர்லாந்து வீரர் ஆண்ட்ரூ பால்பிரினை பென் ஃபோக்ஸ் ஸ்டம்பிங் செய்த வீடியோ..

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!