இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) டைட்டில் ஸ்பான்சரை தீவிரமாக நாடும் நிலையில், ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபி வென்றுள்ளன. வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதற்கு முன்னதாக ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டு வரையில் ரூ.660 கோடிக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குரூப் நிறுவனம் இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் தற்போது மகளிர் பிரீமியர் லீக் பக்கம் தனது கவனத்தை திருப்ப, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்காக பல நிறுவனங்களை பிசிசிஐ நாடி வருகிறது. இதற்காக அண்மையில் ஏலத்தை அறிவித்தது. எந்த நிறுவனமும், ஸ்பான்சர்ஷிப் டெண்டரில் அதிக ஆர்வம் காட்டப்படவில்லை என்றாலும், டெண்டருக்கான விண்ணப்பத்தை வாங்குவதற்கான காலக்கெடு ஜனவரி 8 என்றும் ஜனவரி 13-14க்குள் ஏலச் செயல்முறை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு பிசிசிஐ அதிரடியான நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இந்த டைட்டில் ஸ்பான்சருக்கான உரிமைகளை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் பந்தயம், சூதாட்டம், கிரிப்டோகரன்சி, மது பொருட்கள் ஆகியவற்றில் நேரடியாகவோ அல்லது முறைமுகமாவோ ஈடுபட்டிருக்க கூடாது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
டாடா குழுமம் பெண்கள் பிரீமியர் லீக்கிற்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்ற பிறகு பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தது. இதன் காரணமாக இந்த ஏலத்தை எடுக்கும் நிறுவனத்தின் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தமானது வரும் 2024 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்படும்.
இப்போ எப்படி ஐசிசி தடை விதிக்கும்? உஸ்மான் கவாஜாவின் நக்கல் – ஷூவில் மகள்களின் பெயர்!