ராயுடு, ரிஷப் பண்ட் உட்பட 3 வீரர்களுக்கு குஷியான செய்தி

By karthikeyan VFirst Published Apr 18, 2019, 11:20 AM IST
Highlights

தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதுமட்டுமல்லாமல் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதற்காகவும் விஜய் சங்கரை தேர்வு செய்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதுமட்டுமல்லாமல் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதற்காகவும் விஜய் சங்கரை தேர்வு செய்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் உலக கோப்பைக்கு செல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் வலியுறுத்தினர். ஆனால் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவர் மட்டுமே ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். நான்காவது ஃபாஸ்ட் பவுலர் செய்ய வேண்டிய பணியை ஹர்திக்கும் விஜய் சங்கரும் இணைந்து செய்வர் என்ற வகையில் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் தேர்வு செய்யப்படவில்லை. 

இந்நிலையில், அணியில் இருக்கும் வீரர்கள் காயத்தாலோ அல்லது தவிர்க்க முடியாத வேறு காரணங்களினாலோ உலக கோப்பையில் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் அந்த சூழலில் அவர்களை ரிப்ளேஸ் செய்வதற்கான 3 ஸ்டாண்ட் பை வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாண்ட் பை வீரர்களாக ராயுடு, ரிஷப் பண்ட் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி ஆகிய மூவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியில் இருக்கும் வீரர் யாரேனும் காயத்தாலோ வேறு காரணத்திற்காகவோ ஒதுங்கினால் அந்த வீரரின் இடத்தை இவர்களில் ஒருவர் நிரப்புவார்.

தீபக் சாஹர், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகிய மூவரும் வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!