வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு.. மிடில் ஆர்டருக்கு சிறந்த தீர்வு.. அவங்க 2 பேருக்குமே அணியில் இடம்

By karthikeyan VFirst Published Jul 21, 2019, 2:53 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று தொடர்களுக்குமான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.  உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பிய நிலையில், மிடில் ஆர்டர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் மிடில் ஆர்டரில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவரும், வெஸ்ட் இண்டீஸில் நடந்துவரும் தொடரில் இந்தியா ஏ அணியிலும் சிறப்பாக ஆடிவருகின்றனர். எனவே அவர்கள் இருவருக்கும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் எழுதியிருந்தோம். மிடில் ஆர்டர் சிக்கலை தீர்க்கப்போவது யார்..? அவங்க 4 பேரில் 2 பேருக்கு கண்டிப்பா அணியில் வாய்ப்பு

அதேபோலவே மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். உலக கோப்பையில் பெரிதாக சோபிக்காத போதிலும் குல்தீப், சாஹல் ஆகிய இருவருக்கும் 15 பேர் கொண்ட அணியில் மீண்டும் இடமளிக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரோடு கலீல் அகமது மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் அணியில் எடுக்கப்பட்டிருப்பது நல்ல தேர்வு. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். தவான் காயத்திலிருந்து மீண்டதால் அவரும் அணியில் உள்ளார். ரிசர்வ் தொடக்க வீரராக ராகுல் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். கேதர் ஜாதவும் 15 பேர் கொண்ட அணியில் உள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி. 
 

click me!