முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி அணி தேர்வு.. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Nov 14, 2019, 10:06 AM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கி போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்திய அணி இந்த போட்டியில் 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஒரு பேட்ஸ்மேனை குறைத்து கொண்டுள்ளது. 

ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு ஃபாஸ்ட் பவுலர் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் ஆகிய மூன்று ஃபாஸ்ட் பவுலர்களுமே ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா எடுக்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர்களாக அஷ்வினும் ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஜடேஜா, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ்.

வங்கதேச அணி 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பவுலர்களுடன் இறங்கியுள்ளது. 

வங்கதேச அணி:

இம்ருல் கைஸ், ஷத்மான் இஸ்லாம், முகமது மிதுன், மொமினுல் ஹக்(கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), மெஹெடி ஹசன், டைஜுல் இஸ்லாம், அபு ஜாயித், எபாடட் ஹுசைன்.
 

click me!