அஃபிஃப் ஹுசைன் அரைசதம்; மற்றவர்கள் சொதப்பல்.. தென்னாப்பிரிக்காவுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்

Published : Mar 20, 2022, 05:58 PM IST
அஃபிஃப் ஹுசைன் அரைசதம்; மற்றவர்கள் சொதப்பல்.. தென்னாப்பிரிக்காவுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள்  போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவரில் 194 ரன்கள் மட்டுமே அடித்து 195 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.  

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக அந்த அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று சாதனை படைத்தது வங்கதேச அணி.

2வது ஒருநாள்  போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 314 ரன்களை குவித்த நம்பிக்கையில் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் ஆடியது வங்கதேச அணி. ஆனால் வங்கதேச அணியில் அஃபிஃப் ஹுசைனைத் தவிர மற்ற யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.

தொடக்க வீரர் தமீம் இக்பால் (1), சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன்(0), மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் (16), முஷ்ஃபிகுர் ரஹீம் (11), யாசிர் அலி (2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி.

அதன்பின்னர் மஹ்மதுல்லா 25 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அஃபிஃப் ஹுசைன் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 72 ரன்களை குவித்து வங்கதேச அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்தினார். மெஹிடி ஹசன் 38 ரன்கள் அடித்தார். அதனால் 50 ஓவரில் 194 ரன்களை அடித்த வங்கதேச அணி 195 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!