#BANvsAUS கடைசி டி20யிலும் எளிதான இலக்குதான்..! அடிக்குமா ஆஸி., அணி..?

Published : Aug 09, 2021, 07:35 PM IST
#BANvsAUS கடைசி டி20யிலும் எளிதான இலக்குதான்..! அடிக்குமா ஆஸி., அணி..?

சுருக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 123 ரன்களை அந்த அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி.  

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் படுமோசமான பேட்டிங்கால் படுதோல்வி அடைந்தது. 4வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

5வது போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 4 ஓவரில் 40 ரன்களை சேர்த்து கொடுத்தனர். தொடக்க வீரர்கள் நயீம் 23 ரன்களிலும் மெஹிடி ஹசன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 பந்துகள் எதிர்கொண்டு ஷகிப் அல் ஹசன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 

வங்கதேச அணியின் ரன் வேகத்தை ஷகிப் அல் ஹசனின் இன்னிங்ஸ் மந்தப்படுத்த, அதன்பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 20 ஓவரில் வங்கதேச அணி, 122 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது. இது எளிதான இலக்குதான் என்றாலும், இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணி பேட்டிங் படுமோசமாக ஆடிவருவதால், அந்த அணி இந்த இலக்கை எட்டுகிறதா என்பதை கடைசி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?