2வது ஒருநாள் போட்டியிலும் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

Published : Jan 22, 2021, 09:22 PM IST
2வது ஒருநாள் போட்டியிலும் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

சுருக்கம்

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2வது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார அபார வெற்றி பெற்ற நிலையில், 2வதுபோட்டியும் தாக்காவிலேயே நடந்தது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. கடந்த போட்டியை போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் இந்த போட்டியிலும் எந்த வீரரும் சரியாக ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் பவல் அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே அவரை விட சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதனால் 43.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 148 ரன்கள் அடித்தது.

149 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான தமீம் இக்பால் அரைசதம் அடித்து ஐம்பது ரன்களுக்கே ஆட்டமிழந்தார்.  சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் சிறப்பாக ஆடி 43 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இலக்கு எளிதானது என்பதால் 34வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!