#BBL அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி சதம்..! சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி

Published : Jan 22, 2021, 09:11 PM IST
#BBL அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி சதம்..! சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி

சுருக்கம்

அலெக்ஸ் ஹேல்ஸின் அபார சதத்தால் சிட்னி சிக்ஸர்ஸை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி தண்டர் அணி அபார வெற்றி பெற்றது.  

சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். 

அலெக்ஸ் ஹேல்ஸ் 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் ஃபெர்குசன் 42 ரன்கள் அடித்தார். பில்லிங்ஸ் மற்றும் கட்டிங் ஆகிய இருவரும் தலா 33 ரன்கள் அடித்தனர். இதையடுத்து 20 ஓவரில் சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 232 ரன்கள் அடித்தது.

233 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலிப் 20 ரன்கலும் ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்களும் அடித்தனர். டேனியல் ஹியூக்ஸ் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 35 பந்தில் 56 ரன்கள் அடித்தார். ஜோர்டான் சில்க் 42 ரன்கள் அடித்தார். சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர்கள் போராடியும் அந்த அணியால் 20 ஓவரில் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதையடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சிட்னி தண்டர் அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!