ஒரு வீரர் தேறமாட்டார்னு தோனி நெனச்சுட்டா, அந்த வீரருக்கு கடவுளால் கூட உதவமுடியாது..! முன்னாள் வீரர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 11, 2020, 4:35 PM IST
Highlights

ஒரு வீரர் தேறமாட்டார் என தோனி நினைத்துவிட்டால், அந்த வீரருக்கு கடவுளால் கூட உதவமுடியாது என்று தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் நீண்ட காலம் ஆடிய பத்ரிநாத் தெரிவித்துள்ளார். 
 

ஒரு வீரர் தேறமாட்டார் என தோனி நினைத்துவிட்டால், அந்த வீரருக்கு கடவுளால் கூட உதவமுடியாது என்று தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் நீண்ட காலம் ஆடிய பத்ரிநாத் தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனி, ஐபிஎல்லிலும் வெற்றிகரமான கேப்டன் தான். 

சிஎஸ்கே அணிக்கு 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே தான். தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதால், அணி தேர்வு, கள வியூகம் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு சிஎஸ்கே அணியை வெற்றிகரமான அணியாக வைத்திருக்கிறார். 

இந்நிலையில், தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் 2008லிருந்து 2013 வரை ஆடிய சுப்பிரமணியம் பத்ரிநாத், தோனி குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். 

பத்ரிநாத் தோனியின் கேப்டன்சியில் இந்திய அணியிலும் ஆடியுள்ளார். தோனியின் கேப்டன்சியில் 7 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார். இந்திய அணிக்காக பெரியளவில் ஜொலிக்க முடியாத பத்ரிநாத், சிஎஸ்கே அணியில் தான் தோனியுடன் நெருங்கி பழகினார். 

இந்நிலையில், தோனி குறித்து பேசிய பத்ரிநாத், தோனி ஒவ்வொரு வீரரின் ரோல் என்ன என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். சிஎஸ்கே அணியில் என்னுடைய ரோல், அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது பார்ட்னர்ஷிப் பில்ட் செய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பதுதான். மிடில் ஆர்டர் தான் என்னுடைய ரோல். தோனி எப்போதுமே, வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுப்பார். பத்ரிநாத் நல்ல வீரர் என்று அவர் நினைத்துவிட்டால் கண்டிப்பாக எனக்கு அணியில் இடம் கிடைக்கும். தோனிக்கு ஒரு வீரர் மீது நம்பிக்கை வந்துவிட்டால், அவரது திறமையை நிரூபிப்பதற்கு வாய்ப்பளிப்பார்.

அதேவேளையில், ஒரு வீரர் தேறமாட்டார் என்று அவர் நினைத்துவிட்டால், அந்த வீரருக்கு கடவுளால் கூட உதவ முடியாது. ஏனெனில் எப்பேர்ப்பட்ட சூழலிலும் அவரது மனநிலையை மட்டும் மாற்றமுடியாது என்று பத்ரிநாத் கூறினார். 

பத்ரிநாத், 2008லிருந்து 2013 வரை சிஎஸ்கே அணியிலும் 2014-2015 ஆகிய இரண்டு சீசன்கள் ஆர்சிபி அணியிலும் ஆடினார். மொத்தம் 9 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1441 ரன்கள் அடித்துள்ளார் பத்ரிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!