SL vs AUS 3வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இலங்கை அணியில் ஒரு மாற்றம்.. ஆஸி., அணியில் 3 மாற்றங்கள்

Published : Jun 19, 2022, 02:38 PM IST
SL vs AUS 3வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இலங்கை அணியில் ஒரு மாற்றம்.. ஆஸி., அணியில் 3 மாற்றங்கள்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது.

3வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மித் காயத்தால் ஆடவில்லை. அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் ஆடுகிறார். குனெமேன் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் இந்த போட்டியில் ஆடுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன்/ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.  

இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குணதிலகாவிற்கு பதிலாக டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, டிக்வெல்லா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, ஜெஃப்ரி வாண்டர்சே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே.
 

PREV
click me!

Recommended Stories

Top 10 Indian Batsmen: இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த டாப் 10 இந்திய வீரர்கள்! டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
CSK New Coach: சிஎஸ்கே-வுக்கு புதிய கோச் ராகுல் டிராவிட்டா? 3 வருஷமா ப்ளே ஆஃப் போகாததுதான் காரணமா?