சீட் நுனியில் உட்காரவைத்த உச்சகட்ட பரபரப்பான போட்டி.. கடைசி பந்தில் த்ரில்லாக முடிந்த ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து போட்டி

By karthikeyan VFirst Published Jan 24, 2020, 10:54 AM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் அண்டர் 19 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 252 ரன்கள் அடித்தது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் சார்லஸ்வொர்த் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 100 பந்தில் 82 ரன்களை குவித்தார். ஒருமுனையில் இவர் நிலைத்து ஆடிக்கொண்டிருக்க, மறுமுனையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பாக ஆடிய சார்லஸ்வொர்த் 82 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இங்கிலாந்து அணியின் ஐந்தாவது விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டான் முஸ்லி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை 252 ரன்களாக உயர்த்தினார். 

Also Read - நான் ஆடுனதுலயே எனக்கு ரொம்ப புடிச்ச கேப்டன்கள் இவங்கதான்.. ஷேன் வாட்சன் சொன்னதில் 2 பேர் இந்தியர்கள்

இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் ஃப்ரேசர் 11 ரன்னிலும் சாம் ஃபான்னிங் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கேப்டன் ஹார்வியும் ஹீர்னேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹார்வி 65 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆலிவர் டேவிஸ் மற்றும் லியாம் ஸ்காட் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து ஹீர்னேவும் 45 ரன்களில் ஆட்டமிழக்க, பாட்ரிக் ரோவ் மற்றும் சங்கா ஆகிய இருவரும் படுமந்தமாக பேட்டிங் ஆடிவிட்டு முறையே 11 மற்றும் 21 ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். 

Also Read - ரோஹித் - கோலிக்கு கடும் சவால்.. கோலி கஷ்டப்படுவதை பார்க்க குஷியா ரெடியான கோச்

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் மீது அழுத்தம் அதிகரித்தது. ஆனால் சுல்லியும் மர்ஃபியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினர். 47 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்திருந்தது. எஞ்சிய மூன்று ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்படியான சூழலில் 48வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரை எதிர்கொண்ட சுல்லி, சிக்ஸர் மழை பொழிந்தார். பிளேக் குல்லன் வீசிய அந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் ரன்னே அடிக்காத சுல்லி, அடுத்த 4 பந்தில் 22 ரன்களை குவித்தார். 3 மற்றும் 4வது பந்தில் சிக்ஸர்களும் ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் அடித்த சுல்லி, கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அந்த ஓவரை முடித்தார். 

இதையடுத்து கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 49வது ஓவரில் மர்ஃபி ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் ஒரு வைடுடன் சேர்த்து மொத்தமாக 8 ரன்கள் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் மர்ஃபி சிங்கிள் அடிக்க, இரண்டாவது பந்தில் சுல்லி சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தை மர்ஃபி பவுண்டரிக்கு அனுப்ப, ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. கடைசி 3 பந்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 4 ரன்கள் தேவை. நான்காவது பந்தில் மர்ஃபி சிங்கிள் அடிக்க, ஐந்தாவது பந்தில் சுல்லி 2 ரன்களும் கடைசி பந்தில் சிங்கிளும் அடித்தார். கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 
 

click me!