SL vs AUS: முதல் ODI-க்கான ஆஸி., அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு! மேக்ஸ்வெல்லே 7வது பேட்ஸ்மேன்னா பாருங்களேன்

Published : Jun 13, 2022, 02:30 PM IST
SL vs AUS: முதல் ODI-க்கான ஆஸி., அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு! மேக்ஸ்வெல்லே 7வது பேட்ஸ்மேன்னா பாருங்களேன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்றது. அடுத்ததாக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி நாளை(ஜூன் 14) நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஒருநாள் அணியில் வார்னர், ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேக்ஸ்வெல்லே 7ம் வரிசை பேட்ஸ்மேன். அந்தளவிற்கு பேட்டிங் டெப்த் உள்ளது. 

4 பவுலர்கள் மட்டுமே அணியில் இடம்பெற்றுள்ளனர். ஹேசில்வுட், ஜெய் ரிச்சர்ட்ஸன், கம்மின்ஸ், அஷ்டான் அகர் ஆகிய நால்வர் மட்டுமே அணியில் இடம்பெற்றுள்ளனர். மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், லபுஷேன் ஆகியோரும் பார்ட் டைம் பவுலர்கள் என்பதால், அவர்களை வைத்து எஞ்சிய 10 ஓவர்களை வீசலாம் என்பதால் 4 பவுலர்களுடன் மட்டும ஆஸி., அணி ஆடுகிறது. அதனால் ஆஸி., அணியின் பேட்டிங் டெப்த் வலுவாக உள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸி., அணியின் ஆடும் லெவன்:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்),  மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!