டி20 அணியிலிருந்து அதிரடியாக தூக்கியெறியப்பட்ட ஆல்ரவுண்டர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Oct 8, 2019, 11:36 AM IST
Highlights

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. 
 

2020 மற்றும் 2021 என அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 டி20 உலக கோப்பை தொடர்கள் நடக்கவிருப்பதால் அனைத்து அணிகளும் வலுவான டி20 அணியை உருவாக்கி, பெஸ்ட் 11 வீரர்களுடன் இறங்குவதை உறுதி செய்வதற்காக தீவிரமாக தயாராகின்றன. 

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ளன. இந்த 2 தொடர்களுக்குமான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ஆடுகிறது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆரோன் ஃபின்ச் தலைமையிலான இந்த அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக தூக்கியெறியப்பட்டுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய ஸ்டோய்னிஸ் தூக்கியெறியப்பட்டுள்ளார். 

டாப் ஆர்டரில் வார்னர், ஃபின்ச், ஸ்மித் ஆகியோர் உள்ளனர். மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கும் விதமாக மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, அஷ்டன் டர்னருடன் பென் மெக்டெர்மோட் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, பில்லி ஸ்டேன்லேக் ஆகியோர் உள்ளனர். ஸ்பின் பவுலராக ஆடம் ஸாம்பா எடுக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய டி20 அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் டர்னர், பென் மெக்டெர்மோட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பில்லி ஸ்டேன்லேக், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன், அஷ்டன் அகார்.
 

click me!