மகளிர் டி20 உலக கோப்பை ஃபைனல்: ஸ்டார்க்கின் மனைவி ஹீலி காட்டடி.. இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

Published : Mar 08, 2020, 02:05 PM ISTUpdated : Mar 08, 2020, 02:06 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை ஃபைனல்: ஸ்டார்க்கின் மனைவி ஹீலி காட்டடி.. இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய அணி மிகக்கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது.   

மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியுமான ஹீலி, இந்திய அணியின் பவுலிங்கை தொடக்கம் முதலே அடித்து நொறுக்கினார். 

ஹீலி - மூனி தொடக்க ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை அசால்ட்டாக அடித்து ஸ்கோர் செய்தது. அதிலும் ஹீலியின் பேட்டிங் அபாரம். கொஞ்சம் கூட இடைவெளியே விடாமல், ஸ்கோர் உயரும் வேகத்தில் தொய்வே ஏற்படாத அளவிற்கு அடித்து ஆடினார் ஹீலி. 

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹீலி, 30 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ஹீலி, ஷிகா பாண்டே வீசிய 11வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 4 சிக்ஸர்களை விளாசினார். 39 பந்தில் 75 ரன்களை குவித்த ஹீலி, 12வது ஓவரில் ராதா யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

ஹீலி அவுட்டானதையடுத்து, மூனியுடன் கேப்டன் லானிங் ஜோடி சேர்ந்தார். மூனியும் அரைசதம் விளாசினார். டி20 கிரிக்கெட்டில் தனது 9வது அரைசதத்தை அடித்த மூனி, அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். கேப்டன் லானிங்கை 16 ரன்களில் வீழ்த்திய தீப்தி ஷர்மா, அதே ஓவரில் கார்ட்னெரையும் வீழ்த்தினார். ஆனால் மூனி கடைசி வரை களத்தில் நின்று 54 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 78 ரன்களை குவித்தார். 

Also Read - எத்தனையோ பேட்ஸ்மேன்கள் வரலாம் போகலாம்! ஆனால் எப்பவுமே சச்சின் தான் கெத்து என்பதற்கு இந்த ஷாட்டே சான்று.. வீடியோ

ஹீலி மற்றும் மூனியின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி. 185 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி விரட்டுகிறது. இந்த இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பேயில்லை. இறுதி போட்டி என்பதால் கூடுதல் அழுத்தம் வேறு இருக்கும். ஃபைனலில் சேஸிங் செய்வது கடினம். அதிலும் 185 ரன்கள் என்பது மிகவும் கடினம. 

Also Read - நான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடமாட்டேன்.. ஐபிஎல்லில் இருந்து அதிரடியாக விலகிய இங்கிலாந்து வீரர்

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி
காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?