Ashes: 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு..! இங்கி., அணியில் சீனியர் வீரர்கள் கம்பேக்

By karthikeyan VFirst Published Dec 15, 2021, 6:29 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் காயம் காரணமாக ஆடுவது சந்தேகமாக இருந்த நிலையில், அவர் ஆடுவது உறுதியாகியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி:

மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜெய் ரிச்சர்ட்ஸன்.

இங்கிலாந்து அணியில் முதல் டெஸ்ட்டில் ஆடாத சீனியர் ஃபாஸ்ட் பவுலர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அவர்களது வருகை இங்கிலாந்து அணிக்கு வலுசேர்க்கும். இவர்கள் இணைந்ததால் மார்க் உட் நீக்கப்பட்டுள்ளார். க்ரைக் ஓவர்டனும் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஹசீப் ஹமீத், ஜாக் லீச், டேவிட் மலான், ஆலி போப், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
 

click me!