தாறுமாறாக எகிறிய பந்துகள்.. டெரிஃபிக்கான பிட்ச்.. பாதியில் கைவிடப்பட்ட போட்டி.. பார்ப்பவர்களை பதறவைக்கும் வீடியோ

By karthikeyan VFirst Published Dec 7, 2019, 5:31 PM IST
Highlights

விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலியாவில் ஷேஃபில்டு ஷீல்டு முதல் தர போட்டிகள் நடந்துவருகின்றன. 

விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் விக்டோரியா அணி, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இந்த போட்டி தொடங்கியதிலிருந்தே பந்துகள் தாறுமாறாக எகிறின. பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும். ஆனால் மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் பெரும்பாலான பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. பந்துகளை கணிக்க முடியாத அளவிற்கு தாறுமாறாக எகிறின. 

பீட்டர் சிடிலின் பந்தில், ஷான் மார்ஷுக்கு முகத்தில் அடிபட்டது. அதேபோல மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெல்மெட்டிலும் நெஞ்சின் பக்கவாட்டுப்பகுதியிலும் அடி வாங்கினார். அதேபோல தொடர்ச்சியாக பந்துகள் தாறுமாறாக எகிறியதால் களத்தில் இருந்த ஸ்டோய்னிஸும் க்ரீனும் தங்களது உடம்பில் கண்டபடி அடி வாங்கினார். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததால், முதல் நாள் ஆட்டம் 39.4 ஓவரிலேயே முடித்து கொள்ளப்பட்டது. அந்த வீடியோ இதோ.. 
 

click me!