CWG 2022: மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

Published : Jul 29, 2022, 07:13 PM IST
CWG 2022: மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

சுருக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இம்முறை மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் முதல் முறையாக இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த்தில் முதல் முறையாக நடக்கும் மகளிர் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. பர்மிங்காமில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - WI vs IND: முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி! சீனியர் வீரர் கம்பேக்.. அவங்க 2 பேரில் ஒருவர்.. அது யார்?

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், மேக்னா சிங், ரேணுகா சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வெர்மா அதிரடியாக பேட்டிங் ஆடி 33 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களை விளாசினார். 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48  ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.  அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹர்மன்ப்ரீத் கௌர் 34 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். 20  ஓவரில் 154 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இதையும் படிங்க - SL vs PAK: 2வது டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை..!

155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அதன்பின்னர் கார்ட்னர் மற்றும் க்ரேஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். க்ரேஸ் ஹாரிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த கார்ட்னர் 52 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 19 ஓவரில் இலக்கை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!