ஐபிஎல்லில் யார் சிறந்த ஸ்பின்னர்..? அஷ்வின் அதிரடி

By karthikeyan VFirst Published May 2, 2019, 5:18 PM IST
Highlights

இந்த சீசனில் கூட, இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் மூன்று ஸ்பின்னர்கள் உள்ளனர். இம்ரான் தாஹிர், ஷ்ரேயாஸ் கோபால், சாஹல் ஆகிய மூன்று ரிஸ்ட் ஸ்பின்னர்கள் முறையே 2,3,4வது இடத்தை பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் அஷ்வின், ரஷீத் கான் மற்றும் மேற்கண்ட மூன்று வீரர்கள் என மொத்தம் 5 ஸ்பின்னர்கள் உள்ளனர். 
 
விறுவிறுப்பாக நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

டி20 போட்டி என்றாலே பேட்டிங்கிற்கு சாதகமான, அதிகமான ஸ்கோரை குவிக்கக்கூடிய போட்டியாகவே உள்ளது. அதிலும் ஐபிஎல்லில் அசால்ட்டாக 180-200 ரன்கள் அடிக்கப்படுகின்றன. ஐபிஎல் பேட்டிங் சார்ந்த போட்டியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதிலும் சில பவுலர்கள் மிரட்டலாக வீசி கவனம் ஈர்ப்பதோடு ஐபிஎல் வாயிலாக சர்வதேச அணிகளிலும் இடம்பிடித்துள்ளனர். 

பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது பல பவுலர்களும் ஐபிஎல் மூலம் கிடைத்துள்ளனர். பல போட்டிகளில் பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளனர். அதில் ஸ்பின்னர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

இந்த சீசனில் கூட, இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் மூன்று ஸ்பின்னர்கள் உள்ளனர். இம்ரான் தாஹிர், ஷ்ரேயாஸ் கோபால், சாஹல் ஆகிய மூன்று ரிஸ்ட் ஸ்பின்னர்கள் முறையே 2,3,4வது இடத்தை பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் அஷ்வின், ரஷீத் கான் மற்றும் மேற்கண்ட மூன்று வீரர்கள் என மொத்தம் 5 ஸ்பின்னர்கள் உள்ளனர். 

இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் - சாஹல் ஜோடி வந்தபிறகு அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின், பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடிவருகிறார். அனுபவ ஸ்பின்னரான அஷ்வின், கடந்த சீசன் மற்றும் இந்த சீசனில் பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்துவதோடு பவுலிங்கிலும் மிரட்டிவருகிறார். 

இந்நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு அஷ்வின் அளித்த பேட்டியில், ஐபிஎல்லில் யார் சிறந்த ஸ்பின்னர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஷ்வின், நான் மிகப்பெரிய ஜாம்பவானாக உருவானபிறகு வேறு பெயரை சொல்வேன். இப்போதைக்கு என்னை பொறுத்தவரை நான் தான் சிறந்த ஸ்பின்னர். 11 சீசன்களாக ஆடிவருகிறேன். இதுவரை சிறப்பாகவே வீசிவருகிறேன். எந்த சூழலிலும் யாருடனும் போட்டி போட நான் தயங்கியதே இல்லை. எனவே இப்போதைக்கு என்னைத்தான் சிறந்த ஸ்பின்னராக பார்க்கிறேன் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.

click me!