தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை தகர்த்தெறிந்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான்..! செம சாதனை

Published : Mar 20, 2021, 10:32 PM IST
தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை தகர்த்தெறிந்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான்..! செம சாதனை

சுருக்கம்

தோனியின் டி20 கேப்டன்சி ரெக்கார்டை ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.  

தோனியின் டி20 கேப்டன்சி ரெக்கார்டை ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை வென்றது. இன்று நடந்த 3வது டி20 போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இது அஸ்கர் ஆஃப்கான் கேப்டன்சியில் ஆஃப்கானிஸ்தான் அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெறும் 42வது வெற்றி. வெறும் 52 சர்வதேச டி20 போட்டிகளில் வழிநடத்தி 42 வெற்றிகளை பெற்றுள்ள அஸ்கர் ஆஃப்கான், டி20 கிரிக்கெட்டில்  அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற தோனியின் ரெக்கார்டை தகர்த்துள்ளார்.

தோனி 72 டி20 போட்டிகளில் 41 வெற்றிகளை பெற்றுள்ளார். அஸ்கர் ஆஃப்கான் வெறும் 52 போட்டிகளில் 42 வெற்றிகளை பெற்று, டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!