IND vs SA: நல்ல வேகம்; துல்லியமான யார்க்கர்கள்..! பயிற்சியில் பட்டைய கிளப்பும் அர்ஷ்தீப் சிங்.. வைரல் வீடியோ

Published : Jun 07, 2022, 04:16 PM IST
IND vs SA: நல்ல வேகம்; துல்லியமான யார்க்கர்கள்..! பயிற்சியில் பட்டைய கிளப்பும் அர்ஷ்தீப் சிங்.. வைரல் வீடியோ

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் ஃபாஸ்ட்பவுலர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியில் பந்துவீசிய வீடியோ வைரலாகிவருகிறது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும்9ம்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித், கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், கேஎல் ராகுலின் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில், ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய 2 இளம் ஃபாஸ்ட் பவுலர்களும் முதல் முறையாக அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டவர் உம்ரான் மாலிக். பஞ்சாப் அணிக்காக ஆடிய அர்ஷ்தீப் சிங், நல்ல வேரியேஷனுடன், நல்ல லைன்&லெந்த்தில் டெத் ஓவர்களை அருமையாக வீசக்கூடியவர்.

இவர்கள் இருவரின் திறமையறிந்து இருவரையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் எடுத்தது அணி நிர்வாகம்.

வரும் 9ம் தேதி டெல்லியில் முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் யார்க்கர்கள் வீசி பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது. யார்க்கர்கள் வீசி அர்ஷ்தீப் சிங் பயிற்சி செய்வதால், அவரை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக இந்திய அணி வளர்த்தெடுக்கிறது என்பது புலப்படுகிறது. அவர் யார்க்கர் வீசி பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!