ஆஸ்திரேலிய அணியையே அலறவிட்ட ஆர்ச்சரின் பவுன்ஸர்.. கேரியின் முட்டுவாயை உடைத்த முரட்டு சம்பவம்

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 4:12 PM IST
Highlights

வழக்கமாக ஆஸ்திரேலிய அணி சீக்கிரம் விக்கெட்டுகளை இழந்துவிட்டால், ஸ்டோய்னிஸ் தான் இறக்கப்படுவார். ஆனால் இந்த முறை அலெக்ஸ் கேரி இறக்கப்பட்டார். அலெக்ஸ் கேரி இந்த உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடியும் அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியாத நிலையில், இந்த போட்டியில் பேட்டிங் ஆர்டரில் ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளார். 
 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னரும் ஃபின்ச்சும் களமிறங்கினர். கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் பந்திலேயே வார்னர் பவுண்டரி அடித்தார். ஆனால் அந்த பவுண்டரிக்கு பின்னர் இங்கிலாந்து பவுலர்கள் அபாரமாக வீசினர். 

ஆரோன் ஃபின்ச்சை தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார் ஆர்ச்சர். இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஃபின்ச்சை ஆர்ச்சர் வீழ்த்தினார். ஃபின்ச் கோல்டன் டக்காகி வெளியேறினார். அதற்கடுத்த ஓவரிலேயே வார்னரை வோக்ஸ் வீழ்த்தினார். 9 ரன்கள் அடித்த வார்னர், வோக்ஸின் பவுன்ஸரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஸ்மித்துடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார். ஹேண்ட்ஸ்கம்பையும் வோக்ஸ் களத்தில் நீடிக்க அனுமதிக்கவில்லை. 4 ரன்களில் அவரை போல்டாக்கி அனுப்பினார். 14 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஸ்மித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அலெக்ஸ் கேரி இறங்கினார்.

வழக்கமாக ஆஸ்திரேலிய அணி சீக்கிரம் விக்கெட்டுகளை இழந்துவிட்டால், ஸ்டோய்னிஸ் தான் இறக்கப்படுவார். ஆனால் இந்த முறை அலெக்ஸ் கேரி இறக்கப்பட்டார். அலெக்ஸ் கேரி இந்த உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடியும் அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியாத நிலையில், இந்த போட்டியில் பேட்டிங் ஆர்டரில் ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளார். 

ஸ்மித்துடன் இணைந்து மெதுவாக பார்ட்னர்ஷிப் அமைத்துவருகிறார். அலெக்ஸ் கேரி களத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே அவரை பவுன்ஸரில் அச்சுறுத்தினார் ஆர்ச்சர். 8வது ஓவரை வீசிய ஆர்ச்சர், அந்த ஓவரின் கடைசி பந்தை கேரியின் உடம்பை நோக்கி செம பவுன்ஸராக வீசினார். அந்த பவுன்ஸர் கேரியின் ஹெல்மெட்டை பதம்பார்த்தது. அதில் முட்டுவாய் பகுதியில் அடிபட்டு கேரிக்கு இரத்தம் வடிந்தது. 

ஆனாலும் அவர் பேண்டேஜ் போட்டுக்கொண்டு தொடர்ந்து பேட்டிங் ஆடிவருகிறார். ஆர்ச்சரின் அந்த பவுன்ஸரில் அலெக்ஸ் கேரி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியே அரண்டுவிட்டது. 
 

click me!