குழந்தை பிறப்பிற்காக லண்டனில் முகாமிட்டிருந்த அனுஷ்கா சர்மா தற்போது மகன் அகாய், மகள் வாமிகா உடன் இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையம் வந்த அவரை போட்டோகிராஃபர்ஸ் சூழ்ந்து புகைப்படம் எடுத்தனர்.
கிரிக்கெட் மற்றும் சினிமா பின்னணியை சேர்ந்தவர்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா. இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வாமிகா பிறந்தாள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், அதற்கு முன் சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2ஆவது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது தான், விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2ஆவது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.
இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார். இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், 20ஆம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர். அகாய் என்ற வார்த்தைக்கு துருக்கி மொழியில் ஜொலிக்கும் நிலவு என்று அர்த்தமாம். இதற்கு மற்றொரு அர்த்தமும் சொல்லப்படுகிறது. அதாவது, அகாய் என்பதற்கு வழிகாட்டி என்றும் கைகளைக் கொண்டு வழிநடத்துபவன் என்றும் அர்த்தமாகிறது.
தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தனது மகன் அகாய் மற்றும் மகள் வாமிகா உடன் லண்டனிலிருந்து திரும்ப வந்துள்ளார். இந்தியா வந்த அவரை மும்பை விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது தனது மகன் மற்றும் மகளை கேமராவிற்கு மறைத்து தான் மட்டுமே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், மகனை புகைப்பட கலைஞர்களிடம் காண்பித்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஆர்சிபி விளையாடும் போட்டியை பார்க்க வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.