ஆம்லா மட்டும் இத பண்ணிட்டாருனா அவ்வளவுதான்.. இந்தியாவுக்கு எதிராகவே கோலிக்கு ஆப்படிக்க துடிக்கும் ஆம்லா

By karthikeyan VFirst Published Jun 5, 2019, 2:23 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை இந்திய அணிக்கு எதிராகவே முறியடிக்கும் வாய்ப்பு ஆம்லாவிற்கு கிடைத்துள்ளது. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. மற்றொரு போட்டியில் நியூசிலாந்தும் வங்கதேசமும் மோதுகின்றன.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை இந்திய அணிக்கு எதிராகவே முறியடிக்கும் வாய்ப்பு ஆம்லாவிற்கு கிடைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் சாதனையை முறியடித்துவருகிறார் கோலி. 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார் கோலி. அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 8000 ரன்கள் குவித்த வீரராக கோலி தான் இதுவரை இருக்கிறார். 175 இன்னிங்ஸ்களில் கோலி 8000 ரன்களை அடித்துவிட்டார். 

தற்போது அந்த சாதனையை முறியடிக்க தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ஆம்லாவிற்கு வாய்ப்புள்ளது. ஆம்லா இன்னும் 77 ரன்கள் அடித்தால் 8000 ரன்களை எட்டிவிடுவார். 172 இன்னிங்ஸ்களில் 7923 ரன்களை ஆம்லா அடித்துள்ளார். இன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆம்லா கண்டிப்பாக ஆடுவார். எனவே இது அவரது 173வது இன்னிங்ஸாக இருக்கும். இன்றைய போட்டியில் 77 ரன்கள் அடித்தால் கோலியின் சாதனையை ஆம்லா முறியடித்து விடுவார். ஒருவேளை இன்று அடிக்க முடியாவிட்டாலும், இன்னும் 2 இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் அடித்தால் கோலியின் சாதனையை முறியடிப்பார். ஆனால் கோலியின் சாதனையை இந்தியாவுக்கு எதிராகவே முறியடிக்கும் வாய்ப்பு ஆம்லாவிற்கு கிடைத்துள்ளது.
 

click me!