சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் இவங்கதான்..! லெஜண்ட் ஆலன் டொனால்ட் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 19, 2021, 9:19 PM IST
Highlights

சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட். 1991ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆலன் டொனால்ட், 2003 ஒருநாள் உலக கோப்பை வரை ஆடினார்.

அந்த குறிப்பிட்ட உலக கோப்பை தொடரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் ஓய்வு அறிவித்தார் ஆலன் டொனால்ட்.

72 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 330 விக்கெட்டுகளையும், 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 272 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஆலன் டொனால்ட்.

இந்நிலையில், சமகால கிரிக்கெட்டில் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று கருத்து தெரிவித்துள்ள ஆலன் டொனால்ட், என்னை வியக்கவைத்த வீரர்கள் என்றால் அது நியூசிலாந்து கிரிக்கெட்டர்கள் தான். 2011ம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து அணி இளம் வீரர்கள் பலரை வளர்த்தெடுத்து அணியை வலுவாக கட்டமைத்துள்ளது. சிறந்த ஃபாஸ்ட் பவுலராக திகழ, 150 கிமீ வேகத்தில் எல்லாம் வீச தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள் நியூசிலாந்து பவுலர்கள். கைல் ஜாமிசன், டிரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகியோர் அபாரமான பவுலர்கள்.

தென்னாப்பிரிக்காவின் அன்ரிக் நோர்க்யா மற்றும் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் அருமையான பவுலர்கள் என்று டொனால்ட் தெரிவித்துள்ளார்.
 

click me!