வங்கதேச அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்

Published : Mar 15, 2022, 07:36 PM IST
வங்கதேச அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்

சுருக்கம்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவருமான ஆல்பி மோர்கல் வங்கதேச கிரிக்கெட் அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், வங்கதேச அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது. அந்தவகையில், முன்னாள் ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்துவருகிறது.

வங்கதேச அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்ட் நியமிக்கப்பட்டார். 

ஆல்பி மோர்கல் நியமனம்:

இந்நிலையில், இப்போது பவர் ஹிட்டிங் பயிற்சியாளராகவும் தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவனே நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டரான ஆல்பி மோர்கல் தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 58 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல்லில் 2008லிருந்து 2013ம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக ஆடி, சிஎஸ்கே அணியின் ஃபினிஷராக பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்து 2 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஆல்பி மோர்கல் என்பவர் குறிப்பிடத்தக்கது.

தான் ஆடிய காலத்தில் பெரும் பவர் ஹிட்டரான ஆல்பி மோர்கல், இப்போது வங்கதேச அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?