கோலி - ஸ்மித்.. யார் பெஸ்ட்..? மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் என்ன சொல்றாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Aug 20, 2019, 2:37 PM IST
Highlights

விராட் கோலி - ஸ்மித் ஆகிய இருவருமே திறமையின் அடிப்படையில் சமமான வீரர்கள் தான் என்றாலும், கோலி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். கோலி ப்ரேக்கே இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார். 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக திகழ்கிறார்கள். 

இவர்களில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். இவர்கள் நால்வரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வது கடினம். நம்பரின் அடிப்படையில் கோலி தான் டாப். ஆனால் பேட்டிங் திறமை மற்றும் டெக்னிக்கை பொறுத்தமட்டில் நால்வருமே தலைசிறந்தவர்கள் தான். 

பேட்டிங் சாதனைகள் பெரும்பாலும் விராட் கோலியிடமே உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் எதிரொலியாக ஓராண்டு தடை பெற்ற ஸ்மித், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, மீண்டும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டி ஆஷஸ் போட்டிதான்.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ஸ்மித். இந்த போட்டிக்கு முன் 857 புள்ளிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருந்த ஸ்மித், அந்த போட்டிக்கு பின்னர் இரண்டாமிடத்தை பிடித்துவிட்டார். 

விராட் கோலி - ஸ்மித் ஆகிய இருவருமே திறமையின் அடிப்படையில் சமமான வீரர்கள் தான் என்றாலும், கோலி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். கோலிக்கு பிரேக்கே கிடையாது. இந்நிலையில், கோலி - ஸ்மித் ஆகிய இருவரில் யார் பெஸ்ட் என்று அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது யுடியூப் சேனலில் பேசிய அக்தர், கோலியின் நம்பரே அவர் யார் என்பதை பறைசாற்றும். ஸ்மித் சிறந்த வீரர் தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் 9 ஆண்டுகளாக கோலி ஆடிவரும் விதம் அபாரமானது. மிகவும் ஸ்டைலிஷான திறமையான வீரர் கோலி. தற்போது செம ஃபார்மில் இருக்கும் ஸ்மித், இன்னும் 3 ஆண்டுகளுக்கு இதே ஃபார்மை தொடர்ந்தால், அவர் கிரேட் தான். ஆனால் கோலி தான் பெஸ்ட் என்று அக்தர் புகழ்ந்துள்ளார். 
 

click me!