#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க..! இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி

By karthikeyan VFirst Published Jan 15, 2021, 9:19 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்க்காதது குறித்த தனது அதிருப்தியை வெளிப்பத்தியுள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகார்கர்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலிருந்தே, ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, பும்ரா, ஹனுமா விஹாரி, அஷ்வின் என முக்கியமான வீரர்கள் அனைவருமே தொடர்ச்சியாக காயத்தால் வெளியேறியதால், கடைசி டெஸ்ட்டில் இருக்கும் வீரர்களில் யாரையாவது இறக்கும் நிலைக்கு இந்திய அணி வந்தது.

3வது டெஸ்ட்டில் ஆடிய ஹனுமா விஹாரி, ஜடேஜா, அஷ்வின், பும்ரா ஆகியோர் காயத்தால் வெளியேறியதால், அவர்களுக்கு பதிலாக மயன்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவருக்கும் இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டி. ஸ்பின்னர்கள் ஜடேஜா, அஷ்வின் ஆகிய இருவருமே ஆடாத நிலையில், கடைசி டெஸ்ட்டுக்கான ஸ்பின்னராக பேட்டிங்கும் ஆடத்தெரிந்தவர் என்ற முறையில், வாஷிங்டன் சுந்தர் அணியில் வாய்ப்பு பெற்றார். அதனால் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை.

ஆனால் குல்தீப் யாதவை சேர்க்காதது தவறு என்று அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அகார்கர், குல்தீப் யாதவ் கண்டிப்பாக அதிருப்தியடைந்திருப்பார். இதற்கு முந்தைய கடைசி டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட்டில் அவர் தான் நம்பர் 1 ஸ்பின்னர். ஆனால் அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ஐந்து பவுலர்களுடன் ஆடுவதாக இருந்தால் அவரை சேர்த்திருக்கலாமே?

மிட்செல் ஸ்டார்க் மாதிரியான வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இல்லை. எனவே குல்தீப்பை சேர்த்திர்ந்தால், வெரைட்டி கிடைத்திருக்கும். அவர் மெதுவாக வீசக்கூடியவர் தான் என்றாலும், அது அந்த கண்டிஷனுக்கு சரியாகத்தான் இருக்கும் என்று அகார்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!