ஆஸ்திரேலியர்கள் மைண்ட் கேம் ஆடுவதில் வல்லவர்கள்..! ஆனால் அதை என்கிட்ட ஆடுறது வேஸ்ட்.. ரஹானே செம பதிலடி

By karthikeyan VFirst Published Dec 25, 2020, 5:30 PM IST
Highlights

மைண்ட் கேம் ஆடுவதில் வல்லவர்களான ஆஸ்திரேலியர்கள், அவர்களை அதை செய்ய விட்டுவிட வேண்டும் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி ஆடாததால், ரஹானே தான் கேப்டன்சி செய்கிறார்.

கோலியை போல ரஹானே களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுபவர் இல்லை என்றாலும், மிகச்சிறந்த கேப்டன். அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. கோலி மாதிரி வெளிப்படையாக ஆக்ரோஷத்தை காட்டவில்லை என்றாலும், எதிரணிக்கு களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர் தான் ரஹானே.

அமைதியாக இருப்பவர்கள், ஆக்ரோஷமானவர்கள் இல்லை என்று அர்த்தமல்ல என ரஹானே குறித்து சச்சின் டெண்டுல்கர் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆஸி., தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரஹானே. கோலி ஆடாததால் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ள ரஹானேவிற்கு ஆஸ்திரேலிய அணி அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருந்தார்.

அவருக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள ரஹானே, ஆஸ்திரேலியர்கள் மைண்ட் கேம் ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் போக்கில் மைண்ட் கேம் ஆட அவர்களை நான் விட்டுவிடுவேன். நாங்கள் ஒரு அணியாக நாங்கள் எப்படி ஆடவேண்டும் என்ற எங்கள் காரியத்தில் மட்டுமே கானம் செலுத்துவோம் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.
 

click me!