#AUSvsIND நான் கோலிகிட்ட போய் மன்னிப்பு கேட்டேன்..! ரன் அவுட்டுக்கு பின்னர் நடந்தது என்ன? ரஹானே விளக்கம்

By karthikeyan VFirst Published Dec 25, 2020, 4:18 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ரன் அவுட்டாக்கியதற்காக அன்றைய நாளின் ஆட்டம் முடிந்த பின்னர் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்தார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 போட்டிகளில் விராட் கோலி ஆடாததால், ரஹானே கேப்டன்சி செய்கிறார்.

2வது போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரஹானே, முதல் டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் அடித்திருந்த கோலியை ரன் அவுட்டாக்கியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலியும் ரஹானேவும் இணைந்து அருமையாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 74 ரன்கள் அடித்திருந்த கோலியை, தவறான ஒரு ரன்னுக்கு அழைத்து ரன் அவுட்டாக்கிவிட்டார் ரஹானே. 

இதையடுத்து அன்றைய ஆட்டம் முடிந்து  டிரெஸிங் ரூம் சென்றதும் கோலியிடம் அதற்காக மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்தார். இதுகுறித்து பேசியுள்ள ரஹானே, நானும் கோலியும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தோம். அந்த ரன் அவுட் மிகக்கடினமான ஒன்று. அன்றைய ஆட்டம் முடிந்ததும், கோலியிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அவரும் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. கிரிக்கெட்டில் இதுமாதிரியெல்லாம் நடக்கும். அதையெல்லாம் கடந்து, அதிலிருந்தெல்லாம் மீண்டுதான் வர வேண்டும் என்று ரஹானே தெரிவித்தார். 
 

click me!