பீல்டிங்கில் அங்கும், இங்கும் ஓட வைத்த பாண்டியா – விரக்தியோடு பேசிய ரோகித் சர்மா – வைரல் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Mar 25, 2024, 10:10 AM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங்கில் தன்னை ஹர்திக் பாண்டியா அங்கும், இங்கும் ஓட செய்ததையும் பொருட்படுத்தாம் அவருடன் கோபமாக பேசிய ரோகித் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது.


ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையில் மறைமுக எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரோகித் சர்மா வாழ்த்து கூறவில்லை. மேலும், ரோகித் சர்மா ரசிகர்களும் கடுமையாக பாண்டியாவை விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான் நேற்று நடந்த போட்டியின் போதும் இந்த மறைமுக சண்டை வெளிப்பட்டிருக்கிறது.

Mumbai Indians: தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோல்வி அடைந்து மும்பை இந்தியன்ஸ் மோசமான சாதனை!

Tap to resize

Latest Videos

நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் நடையை கட்டினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டனாக சாதித்து காட்டிய சுப்மன் கில் – அகமதாபாத்தில் மண்ணை கவ்விய ஹர்திக் பாண்டியா அண்ட் கோ!

மேலும், மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 47 பந்துகளில் 62 ரன்கள் தேவைப்பட்டது. வரிசையாக மும்பை அணியில் டிவேல்டு பிரேவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருந்தது. எனினும் சீரான இடைவெளியில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

முதல் 2 பந்தில் ஹர்திக் பாண்டியா 6, 4 என்று 10 ரன்கள் எடுத்தார். 3ஆவது பந்தில் அவர் ஆட்டமிழக்க, 4ஆவது பந்தில் பியூஷ் சாவ்லா ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸில் அறிமுகமான 4 வீரர்கள் – பீல்டிங், பேட்டிங்கில் சக்கை போடு போட்ட நமன் திர் யார்?

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியின் போது ரோகித் சர்மா அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். மும்பை வீரர்கள் யாரும் ரோகித் சர்மாவிற்கு மரியாதையும் அளிக்கவில்லை. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது போட்டியின் 19ஆவது ஓவரில் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனில் நிற்க வைத்த வீடியோ காட்சிகள் வைரலானது.

ஆனால், போட்டியின் 7.4ஆவது ஓவரில் பவுண்டரி லைனில் வைத்து தான் ரோகித் சர்மா, கில்லிற்கு கேட்ச் பிடித்தார். போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா குஜராத் வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து ஹர்திக் பாண்டியா கட்டிப்பிடித்தார். இதையடுத்து கோபம் அடைந்த ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பும்ரா வேகத்திற்கு 168 ரன்னுக்கு சுருண்ட குஜராத் டைட்டன்ஸ் – ஆறுதல் கொடுத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்!

click me!