#AUSvsIND இந்திய அணியின் தோல்விக்கு அவருதான் முக்கிய காரணம்..! கில்கிறிஸ்ட் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 20, 2020, 10:47 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலுமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறியதுதான் காரணம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் படுமோசமான பேட்டிங்கால், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்து படுமட்டமாக தோற்றது.

முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி என யாருமே சரியாக ஆடவில்லை. 2வது இன்னிங்ஸில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. 

தொடக்க வீரர் பிரித்வி ஷா, 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான பிரித்வி ஷா, 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். 2 இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணிக்கு, அவரிடமிருந்து தேவைப்பட்ட நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டார். அதுதான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆடம் கில்கிறிஸ்ட், 2 இன்னிங்ஸ்களிலுமே பிரித்வி ஷா விரைவில் ஆட்டமிழந்துதான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. கடந்த ஆஸி., சுற்றுப்பயணத்தில் கூட பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அவருக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் சிக்கல்களை ஆராய்ந்து  திருத்தி மேம்பட வேண்டும். குறிப்பாக அவரது பேட்டிற்கும் காலுக்கும் இடையேயான இடைவெளிதான் அவரது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
 

click me!