சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆரோன் ஃபின்ச் ஓய்வு

By karthikeyan VFirst Published Sep 10, 2022, 2:18 PM IST
Highlights

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஓய்வு அறிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான ஆரோன் ஃபின்ச், 2015 ஒருநாள் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 145 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 5041 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க - கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் காயமடைந்த ஜடேஜா..! ரோஹித், டிராவிட் செம கடுப்பு.. பிசிசிஐ அதிருப்தி

2018ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் தடை பெற, அப்போதிலிருந்து ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியை ஏற்ற ஆரோன் ஃபின்ச், 54 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ளார். 

ஆரோன் ஃபின்ச்சின் கேப்டன்சியில் தான் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் மட்டும் நீடிக்கும் விதமாக, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார் ஃபின்ச்.

அண்மையில் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவிடம் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் தோற்றது ஆஸ்திரேலிய அணி. இப்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஜெயித்து ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டி நாளை நடக்கிறது.

இதையும் படிங்க - அப்படினா நான் வெளியே உட்காரணுமா..? கோலி குறித்த நிருபரின் கேள்வியால் கடுப்பான ராகுல்

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார் ஆரோன் ஃபின்ச். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுகிறார். வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் ஆரோன் ஃபின்ச்சின் கேப்டன்சியில் தான் ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையில் ஆடவுள்ளது. இந்த டி20 உலக கோப்பையை ஜெயித்துவிட்டு டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறூவதுதான் ஃபின்ச்சின் திட்டமாக இருக்கும்.
 

click me!