மறுபடியும் ஒரு மந்தமான இன்னிங்ஸ் ஆடிய வார்னர்.. சதத்தை நோக்கி கேப்டன் ஃபின்ச்

By karthikeyan VFirst Published Jun 15, 2019, 5:04 PM IST
Highlights

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 
 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடிவருகின்றன. மாலை 6 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடுகின்றன. 

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

செம ஃபார்மில் இருக்கும் ஃபின்ச் வழக்கம்போலவே அதிரடியாக தொடங்க, இந்த போட்டியிலும் வார்னர் மந்தமாகவே தொடங்கினார். இந்த உலக கோப்பை தொடங்கியதிலிருந்தே வார்னர், தனது வழக்கமான அதிரடியான பேட்டிங்கை ஆடவில்லை. நிதானமாகவே ஆடினார். ஆனால் பெரிய இன்னிங்ஸாக மாற்றினார். அதை இந்த போட்டியில் செய்ய தவறிவிட்டார். 

ஒருமுனையில் ஃபின்ச் அதிரடியாக ஆட, மறுமுனையில் மந்தமாக ஆடிய வார்னர், 48 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக ஆடிய கேப்டன் ஃபின்ச் அரைசதம் அடித்தார். வார்னரின் விக்கெட்டுக்கு பிறகு ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜாவும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபின்ச்சுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

ஃபின்ச் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். உலக கோப்பை தொடங்கியதிலிருந்தே செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் ஃபின்ச், இலங்கை அணியின் பவுலிங்கை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறார். அவர் சதமடித்துவிட்டால் மேலும் அதிரடியாக ஆடுவார். ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரெல்லாம் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. 
 

click me!