உலக கோப்பை அணி குறித்து நறுக்குனு 4 கேள்விகள்!!

By karthikeyan VFirst Published Mar 14, 2019, 1:12 PM IST
Highlights

உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும் தரமான சம்பவம் இது. இந்த தொடரின் மூலம் உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, ரிச்சர்ட்ஸன் ஆகிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையில் பலம் சேர்க்கும் வீரர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை நெருங்கிய நிலையில், ஒரு அணியாக நன்றாக செட் ஆகிவிட்டது. இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனினும் ஸ்மித்தும் வார்னரும் இல்லாமலயே இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. 

உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும் தரமான சம்பவம் இது. இந்த தொடரின் மூலம் உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, ரிச்சர்ட்ஸன் ஆகிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையில் பலம் சேர்க்கும் வீரர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் அந்த அணி மிகவும் பலமான அணியாக மாறிவிடும். ஆஸ்திரேலிய அணி வலுவடைந்து வரும் வேளையில், இந்திய அணியில் இன்னும் சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்படவில்லை. நான்காம் இடத்தில் இறங்கப்போவது யார், ரிசர்வ் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விகள் எல்லாம் உள்ளது. 

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் போட்ட பின்னர் பேசிய கேப்டன் கோலி, இந்த போட்டியில் ஆடும் அணிதான் ஏறக்குறைய உலக கோப்பையிலும் ஆடும் என்றார். அதன்படி பார்க்கையில் ராயுடுவிற்கு அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக பறைசாற்றினார். 

அதேபோல ரிசர்வ் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? என்ற கேள்விக்கும் பதில் இல்லை. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோரை தவிர நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வியும் உள்ளது. 

இதுபோன்ற பல கேள்விகள் இருக்கும் நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்து நான்கு கேள்விகளை முன்வைத்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. டுவிட்டரில் அவர் கேட்ட நான்கு கேள்விகள்:

1. மாற்று தொடக்க வீரர் யார்?

2. 4ம் வரிசையில் இறங்கப்போவது யார்?

3. நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யார்?

4. மாற்று விக்கெட் கீப்பர் யார்? 

மேற்கண்ட 4 கேள்விகளை கேட்டுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

click me!