#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! ஆகாஷ் சோப்ரா ஆருடம்

Published : Sep 14, 2021, 05:23 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! ஆகாஷ் சோப்ரா ஆருடம்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் இறுதி போட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன.

அதற்காக அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஏற்கனவே 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், 3 முறை டைட்டிலை வென்றுள்ள சிஎஸ்கே 4வது முறையாக வெல்லும் முனைப்பிலும் ஆடுகின்றன.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் ரிஷப் பண்ட்டின் தலைமையில் ஆடுகிறது.

வரும் 19ம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.  அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், எந்த அணிகள் ஃபைனலில் மோதும் என்று ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.

5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், 3 முறை சாம்பியன் சிஎஸ்கேவும் தான் இந்த சீசனின் ஃபைனலில் மோதும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்