India vs Sri Lanka: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

Published : Feb 24, 2022, 05:16 PM IST
India vs Sri Lanka: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை.

எனவே ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான  இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இஷான் கிஷனுடன் ருதுராஜ் கெய்க்வாட்டை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, கேப்டன் ரோஹித் சர்மா 3ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம் என தெரிவித்துள்ளார். 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 5ம் வரிசையில் தீபக் ஹூடா, 6ம் வரிசையில் வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, சஞ்சு சாம்சனை புறக்கணித்துள்ளார். சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். அவரை இறக்கினால் டாப் ஆர்டரில் தான் இறக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாததால் அவரை மிடில் ஆர்டரில் இறக்க தேவையில்லை என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் சாஹல் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ZIM: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! ஸ்டார் ஓப்பனருக்கு ஷாக், இளம் புயலுக்கு சான்ஸ்!
Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!