India vs West Indies: அவங்க 3 பேருமே டீம்ல வேண்டாம்; இந்த 11 பேரை இறக்குங்க..! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு

Published : Feb 05, 2022, 05:48 PM IST
India vs West Indies: அவங்க 3 பேருமே டீம்ல வேண்டாம்; இந்த 11 பேரை இறக்குங்க..! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

ரோஹித் சர்மா முழுநேர கேப்டனான பிறகு அவரது தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் ஒருநாள் தொடர் இது என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் அவரது தங்கச்சி திருமணத்திற்கு சென்றுள்ளதால் முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. தவான், ருதுராஜ், ராகுல் ஆகிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆடமுடியாததால், தன்னுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்கவுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா உறுதி செய்துவிட்டார்.

மயன்க் அகர்வால் குவாரண்டினை முடிக்காததால் இஷான் கிஷன் தான் தன்னுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பதை கேப்டன் ரோஹித் சர்மா உறுதி செய்துவிட்டார்.

ஆனால் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவனில், ரோஹித் சர்மாவுடன் மயன்க் அகர்வாலை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசையில் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அதன்பின்னர் 5 மற்றும் 6ம் வரிசைகளில் முறையே சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஸ்பின்னர்களாக சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜையும் தேர்வு செய்துள்ளார்.

ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், இஷான் கிஷன் ஆகிய வீரர்களை ஆடும் லெவனில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்யவில்லை.

முதல் ஒருநாள் போட்டிக்கு ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: சூர்யா, கில் அவுட்... ரஜத் படிதார் கேப்டன்? இப்படி ஒரு டீமை கற்பனை செஞ்சு பாருங்க!
Vaibhav Sooryavanshi: 15 வயதில் கோடிகளில் புரளும் வைபவ்! IPL-க்கு பின் இரட்டிப்பான பிராண்ட் மதிப்பு!