சமகாலத்தின் பெஸ்ட் டெஸ்ட் லெவன்..! முக்கியமான தலையை புறக்கணித்த கொடுமை.. ஆனாலும் செம டீம்

By karthikeyan VFirst Published Jun 18, 2020, 3:38 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் உலக லெவன், சமகால பெஸ்ட் லெவன் ஆகிய அணிகளை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில் ஏற்கனவே சமகாலத்தின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, இப்போது, சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 

தனது சிறந்த டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் டாம் லேதம் மற்றும் இந்தியாவின் மயன்க் அகர்வால் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி மற்றும் ஜோ ரூட் ஆகிய மூவரையும் முறையே 3, 4 மற்றும் 5ம் வரிசை வீரர்களாக தேர்வு செய்துள்ளார். 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் மற்றொருவரான கேன் வில்லியம்சனுக்கு தனது லெவனில் இடமளிக்கவில்லை ஆகாஷ் சோப்ரா. விராட் கோலியை இந்த அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளார். ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸையும் விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஃபாஸ்ட் பவுலர்களாக ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் நீல் வாக்னர் மற்றும் இந்தியாவின் நட்சத்திர பவுலர் பும்ரா ஆகிய மூவரையும் ஸ்பின்னராக நேதன் லயனையும் தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ராவின் சமகால சிறந்த டெஸ்ட் லெவன்:

டாம் லேதம், மயன்க் அகர்வால், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி(கேப்டன்), ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நீல் வாக்னர், பும்ரா, நேதன் லயன்.

click me!