இந்திய கிரிக்கெட் அணிக்கான அடுத்த 10 வருஷத்துக்கான பக்கா ‘ப்ளூபிரிண்ட்”டுடன் வருகிறார் ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Oct 28, 2021, 8:47 PM IST
Highlights

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக டி20 உலக கோப்பைக்கு பிறகு பொறுப்பேற்கவுள்ள ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான பக்கா திட்டங்களுடன் தான் வருவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமின்றி ஆடிய ஒரு வீரர் உண்டு என்றால், அவர் ராகுல் டிராவிட் தான். பல இக்கட்டான சூழல்களில் களத்தில் நிலைத்து நின்று  இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, இந்திய அணியின் சுவர் என்று பெயர் பெற்றவர் ராகுல் டிராவிட்.

இந்திய அணிக்காக 1996ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆடிய ராகுல் டிராவிட், 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,288  ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களையும் குவித்து இந்திய கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் ராகுல் டிராவிட்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், இந்திய கிரிக்கெட்டுக்காக, அண்டர் 19 அணி பயிற்சியாளர், என்சிஏ தலைவர் என பல உயரிய பதவிகளை வகித்து இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய வருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ  அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகிய இளம் வீரர்களை இந்திய கிரிக்கெட்டுக்கு உருவாக்கி கொடுத்தார். மேலும் ராகுல், மயன்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர்  உள்ளிட்ட சிறந்த வீரர்களை மெருகேற்றி கொடுத்தார்.

ராகுல் டிராவிட் ஜூனியர் லெவலில் உருவாக்கி கொடுத்த வீரர்கள் தான் இன்றைக்கு சீனியர் இந்திய அணியில் அசத்திவருவதுடன், அடுத்ததாக அணியில் இடம்பிடிக்க வரிசைகட்டி நின்றுகொண்டிருக்கின்றனர்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின்(என்சிஏ) தலைவராக இருந்துவரும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், டி20 உலக கோப்பையுடன் முடிவடையும் நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் ராகுல் டிராவிட்.

ராகுல் டிராவிட் விண்ணப்பித்தபோதே, அவர் தான் தலைமை பயிற்சியாளர் என்பது உறுதியான விஷயம். வேறு யார் விண்ணப்பித்தாலும், பிசிசிஐ பரிசீலனை செய்யக்கூட வாய்ப்பில்லை. எனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராவது உறுதியாகிவிட்டது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி பல உயரங்களை எட்டப்போவது உறுதி.

இந்நிலையில், ராகுல் டிராவிட் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ராகுல் டிராவிட் என்ன செய்வார்? கண்டிப்பாக ஒரு தெளிவான பிராசஸை எடுத்துவருவார் என நினைக்கிறேன். அதற்காக இந்திய அணி சரியாக செயல்படவில்லை என அர்த்தமல்ல. இந்திய அணி வெற்றிகரமாகவே திகழ்கிறது. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவிலும்,  இங்கிலாந்தை இங்கிலாந்திலும் வீழ்த்தியிருக்கிறது. உலக சாம்பியனாக தகுதியான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 5 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்திருக்கிறது.

அந்தவகையில், இந்திய அணி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. ராகுல் டிராவிட்  கண்டிப்பாக குறுகிய கால பார்வையுடன் வரமாட்டார். அடுத்த 5-10 ஆண்டுகளுக்கான இந்திய அணிக்கான ப்ளூப்ரிண்ட்டுடன் தான் ராகுல் டிராவிட் வருவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!