IPL 2022: அந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை கேப்டனாக நியமிங்க..! ஆர்சிபி அணிக்கு ஆகாஷ் சோப்ரா கொடுக்கும் தரமான சாய்ஸ்

By karthikeyan VFirst Published Jan 25, 2022, 7:47 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும்  அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலம் வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.

ஏலத்திற்கு முன்பாக 8 பழைய அணிகளும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3வீரர்களை வாங்கியுள்ளன. 

இந்த மெகா ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் பெயர்களை கொடுத்துள்ளனர். சில பெரிய வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஆர்சிபி, கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் புதிய கேப்டன்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திவந்த விராட் கோலி, ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற விமர்சனம் இருந்துவந்த நிலையில், கடந்த சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துவிட்டார்.

எனவே, அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நல்ல கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஜேசன் ஹோல்டரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்து அவரையே கேப்டனாக நியமிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறியது. ஜேசன் ஹோல்டர் நல்ல ஆல்ரவுண்டர். அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்; நல்ல பவுலரும் கூட. வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியும் இருக்கிறார். எனவேஆர்சிபி அணியின் கேப்டன்சியை ஏற்க சரியான வீரராக ஹோல்டர் இருப்பார். எனவே ஹோல்டரையே ஆர்சிபி அணி கேப்டனாக நியமிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஜேசன் ஹோல்டரை அந்த அணி விடுவித்த நிலையில், அவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமிக்குமாறு ஆர்சிபி அணிக்கு ஐடியா கொடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆர்சிபி அணி விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரையும் தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!