போன போட்டியில் பண்ண தவறைத்தான் இதுலயும் பண்ணீங்க!! அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்..? கிழித்தெறிந்த முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Feb 28, 2019, 3:42 PM IST
Highlights

இரண்டாவது போட்டியில் சில மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் போட்டியில் ராகுலை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. மேலும் சரியாக 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆடியது. எனவே கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் கிடைக்கும் வண்ணம், விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்தது. 

முதல் டி20 போட்டியில் வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி, 127 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலிய அணியை எளிதாக எட்டவிடவில்லை. பவுலிங்கில் நெருக்கடி கொடுத்து கடைசி பந்து வரை அந்த அணியை பதற்றத்திலேயே வைத்திருந்தது. எனினும் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோற்றதற்கு அணி தேர்வும் ஒரு முக்கிய காரணம்.

இதையடுத்து இரண்டாவது போட்டியில் சில மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் போட்டியில் ராகுலை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. மேலும் சரியாக 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆடியது. எனவே கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் கிடைக்கும் வண்ணம், விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அணியில் ஒரு பேட்டிங் ஆப்சன் அதிகமாக கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 3 மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது. விஜய் சங்கர் சேர்க்கப்படுவார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் ஒரு பேட்ஸ்மேனுக்கு(தினேஷ் கார்த்திக்/ரிஷப் பண்ட்) பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மார்கண்டேவிற்கு பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இரண்டாவது போட்டியிலும் பும்ரா, கவுல், சாஹல், குருணல், விஜய் என சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கியது. 

இவர்களில் குருணல் மற்றும் விஜய் சங்கர் முழுநேர தொழில்முறை பவுலர்கள் அல்ல. பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் சிறந்த பவுலிங் யூனிட்டுடன் களமிறங்க வேண்டியது அவசியம். அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சம்மந்தமே இல்லாமல் ரோஹித்துக்கு பதில் தவான் சேர்க்கப்பட்டார்.

நேற்றைய போட்டியில் 190 ரன்கள் அடித்தும் ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம், சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கியதுதான். அதிலும் இருவர் பார்ட் டைம் பவுலர்கள். இதுதான் காரணம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு பிறகு, இரண்டாவது போட்டியிலாவது கூடுதல் பவுலருடன் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று சோப்ரா தெரிவித்திருந்தார். ஆனால் மறுபடியும் 5 பவுலர்களுடன் மட்டுமே இந்திய அணி இறங்கியது. மார்கண்டேவை நீக்காமல் தினேஷ் கார்த்திக்கையோ அல்லது ரிஷப் பண்ட்டையோ நீக்கிவிட்டு விஜய் சங்கரை சேர்த்திருக்க வேண்டும்.
 

click me!