India vs South Africa: இந்திய ஒருநாள் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..!

By karthikeyan VFirst Published Jan 13, 2022, 4:21 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில்  2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

டெஸ்ட் முடிந்த பின்னர் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்த ஒருநாள் தொடரிலிருந்து ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருந்தார். ஆனால் காயம் காரணமாக இந்த தொடரில் ரோஹித் சர்மா ஆடாததால், கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவர் இந்த தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல, இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ், 2வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு இன்னும் முழு ஃபிட்னெஸை அடையாததால், அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.
 

click me!