வீட்டில் விளக்கேற்றும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன. அவை..
நாம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஏனெனில், விளக்கு ஏற்றுவது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. மகாலட்சுமி நம்ப வீட்டில் இருக்கிறாள் என்பதற்கான அடையாளம் தான் இது.
அதுமட்டுமின்றி, திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளை முதன் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். இது நம் கலாச்சாரத்தில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் எந்தவொரு விஷேசம் நடந்தாலும் முதலில் விளக்கேற்றி வைத்து தான் தொடங்குவார்கள். வீட்டில் விளக்கு ஏற்றாமல் எந்த ஒரு மங்களம் காரியத்தையும் செய்வது இல்லை. முக்கியமாக விளக்கு ஏற்றும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, நாம் விளக்கு ஏற்றினால் எல்லாவிதமான ஐஸ்வரியங்கள் நமக்கு கிடைக்கும் மற்றும் மனதில் நிம்மதி உண்டாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, வீட்டில் விளக்கேற்றும் போது தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
வீட்டில் விளக்கேற்றும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
வீட்டில் காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் விளக்கேற்றி இருக்க வேண்டும். ஏனெனில், சூரியன் உதிப்பதற்கு முன் வீட்டில் விளக்கேற்றுவது பலவிதமான நன்மையை கொடுக்கும். முக்கியமாக, குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டும்.
அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு தான் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். அதாவது, மாலை 6.00 மணிக்கு தான் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக, விளக்கேற்றும் போது விளக்கானது கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
மேலும் இறந்தவர்களின் படத்திற்கு விளக்கு ஏற்றும் போது வடக்கு திசையில் ஏற்ற வேண்டும்.
நீங்கள் கோவிலிலோ அல்லது வீட்டிலோ விளக்கேற்றும் போது இரண்டு கால்களையும் மடக்கி சம்மனம் இட்டு தான் விளக்கேற்ற வேண்டும். வீட்டில் குத்துவிளக்கு ஏற்றும் போது கூட தரையில் அமர்ந்து தான் ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்கள்: சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய்யினால் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. ஏனெனில், இவை வீட்டில் தரித்ரியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.