தை அமாவாசை 2024 : சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! 

Published : Feb 05, 2024, 04:51 PM ISTUpdated : Feb 05, 2024, 05:01 PM IST
தை அமாவாசை 2024 : சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! 

சுருக்கம்

தை அமாவாசை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு தான் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சுவாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே  தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

இந்நிலையில், தை அமாவாசை வழிபாட்டுக்காக பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையில் இருக்கும் சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

  • கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் சென்று வர வேண்டும்.
  • இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆறுகளில் இறங்கி குளிக்கவும் அனுமதி இல்லை.
  • அதுபோல், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும்.
  • இந்த தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்கிறது.

இதையும் படிங்க:  தை அமாவாசை 2024 எப்போது..? தேதி,  நேரம் மற்றும் தர்பணத்தின் பலன்கள்.. 

அப்படி என்ன சிறப்பு?
சதுரகிரி மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். கயிலாயத்தை விட சதுரகிரி மலை புனிதமானது என்று  கூறப்படுகிறது. மேலும் இது சித்தர்கள் வாழும் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தி கோவில் மற்றும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தி கோயில் உள்ளது.

இதையும் படிங்க:   தை அமாவாசை 2024 : இவற்றை தானம் செய்யுங்கள்.. ஜென்ம பாவம் தீரும்..முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்!

இந்த சதுரகிரி மலையானது மூலிகை நிறைந்த மலை என்றும், இங்கு ஓடும் தண்ணீர் புனித தீர்த்தம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த மலையில் ஏறி இறங்கினால் உடலில் இறங்கினால் நோய்கள் என்றும், அதுவும் இந்த மலையில் காற்றை சுவாசித்தால் நாள்பட்ட நோய்கள் குணமாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். அதுபோல் 
இங்கு சென்று வந்தால் மன அழுத்தம், மன பாரம் நீங்கும் என்று பலர் சொல்லுகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!