ஆடி மாதத்தில் குலதெய்வத்திற்கு மாவிளக்கு வழிபாடு எப்படி? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

By Kalai Selvi  |  First Published Jul 24, 2023, 10:50 AM IST

ஆடி மாதத்தில் குலதெய்வத்திற்கு எப்படி மாவிளக்கு வழிபாடு நடத்த வேண்டும் என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது இங்கே..


ஆடி மாதம் தொடங்கி விட்டதால், அம்மன் கோயில்கள் தினமும் திருவிழா போல் களைக்கட்டும். இந்நிலையில், ஆடி மாதத்தில் நாம் எந்த அளவிற்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவிற்கு நாம் நம்முடைய குல தெய்வத்தையும் வழிபட வேண்டும். இவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் தான் நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பு பெருகும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக நாம் நம் குல தெய்வங்களுக்கு மாவிளக்கு செய்து வழிபாடு நடத்த வேண்டும். எனவே, மாவிளக்கு வழிபாடு செய்வது எப்படி? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

மாவிளங்கு வழிபாடு எப்படி?
மாவிளங்கு செய்ய முதலில் கால் கிலோ பச்சரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு உருண்டை போல் உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், உருண்டையின் நடுவில் ஒரு குழி தோண்டி கொள்ள வேண்டும். பின் அதை அம்மன் சந்நிதியில் நேராக வைக்க வேண்டும். மாவு உருண்டைகளின் நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு வைக்கவேண்டும். பின் குழியில், நெய் ஊற்றி திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: Annamalaiyar Temple: ஆடிப்பூரம் பிரம்மோற்சவம்.. அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா

மேலும் மஞ்சள், சந்தனம், குங்குமம், பூ வைத்திருக்கும் இடத்தில், வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழத்தை வைக்க வேண்டும். அதுபோல் ஒரு தேங்காயை உடைத்து இரு புறமும் வைக்க வேண்டும். விளக்கு திரி நன்கு எரிந்து முடித்த பின் அந்த திரியை கோவிலுக்கு எடுத்து சென்று அங்கு இருக்கும் விளக்குகள் ஏதாவது ஒன்றில் அணையாத படி வைக்க வேண்டும். 

இதையும் படிங்க: 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாமபுரீஸ்வரர் கோவில்! ஆடிப்பூர திருவிழா! அம்மனுக்கு 11000 வளையல் அலங்காரம்!

இவ்வாறு நீங்கள் உங்கள் குல தெய்வத்திற்கு மாவிளக்கு செய்து வழிப்பட்டால் உங்களைத் தேடி பல நன்மைகள் வரும். அதுபோல் உங்களுக்கோ அல்லது வீட்டில் யாராவது ஒருவருக்கோ திருமண தடைகள் இருந்தால் அவையும் நீங்கும், மேலும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும், புகழும் கிடைக்கும்.

click me!