தமிழகத்தின் இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுந்தர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு பதினொன்று ஆயிரம் வளையல்களைக் கொண்டு சிறப்பு வளையல் அலங்காரம் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
தமிழகத்தின் இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுந்தர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
இந்நிலையில் இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப் பூரத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள தர்மஸம்வர்த்தினி அம்மனுக்கு 11,000க்கும் மேற்பட்ட வளையல்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதன்பின்னர் தர்மஸம்வர்த்தினி அம்பாள் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பின்னர் ஆலயத்தில் உள்புறமாக தர்மஸம்வர்த்தினி அம்பாள் உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்ட ரத தேரில் ஆலய உலா வலம் வந்து பக்தர்களுக்குகாட்சியளித்தனர். ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.