உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் இந்த விழா வெகுவிமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் இந்த விழா வெகுவிமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படுவது மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் தான். அந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதும் இருந்து வருவது வழக்கம்.
இதையும் படிங்க: உங்க வீட்டில் குலதெய்வம் இருக்கா.. இல்லையா..?? கண்டுபிடிக்க ஈசியான அறிகுறிகள்!
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி வாஸ்து சாந்தி துவங்குகிறது. மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 23ம் தேதி நிறைவடைகிறது.
இதையும் படிங்க: திருமணமான பெண்கள் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்கலாமா..? சாஸ்திரம் சொல்வது என்ன..??
ஏப்ரல் 12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்கிறது. ஏப்ரல் 19ம் தேதி இரவு 7.35 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்ரல் 20ம் தேதி மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், 21ஆம் தேதி மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும் 22ஆம் தேதி திருத்தேரோட்டம், 23ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.