விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 18, 2023 திங்கள் கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு ஒரு தந்தம் உடைந்திருப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகைகளில் ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி. முழு முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுக்கான கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடருகிறது என்றே சொல்லலாம்.
அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில் 3 – 10 நாட்கள் வரை விசேஷமாக விநாயகர் சதுர்த்தி நடைபெறும். கணேஷ் உத்சவ் அல்லது கணேஷ் சதுர்த்தி என்று கூறுவார்கள். செப்டம்பர் 19 தொடங்கி செப்டம்பர் 28 வரை 10 நாட்களும் கோலாகலமாக கணேச உத்சவ் கொண்டாடப்படும். இந்துக்களின் புராணங்களில் படி விநாயகர் அவதரித்த கதை மிகவும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
அதன்படி, சிவபெருமான் இல்லாத பொழுது தன்னைப் பாதுகாப்பதற்கு ஒரு நம்பிக்கையான தைரியமான பாதுகாவலர் வேண்டும் என்ற காரணத்தினால், பார்வதி தேவி தன் உடலில் பூசி இருந்த மஞ்சள் மற்றும் சந்தனத்தில் இருந்து விநாயகருக்கு உயிர் கொடுத்தார். பார்வதி தேவி குளித்து கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்துக்கு காவலாக விநாயகர் இருந்தார்.
அப்பொழுது சிவபெருமான் உள்ளே நுழைய முயற்சிக்கும் பொழுது சிவபெருமானையே விநாயகர் தடுத்துவிட்டார். அதில் கோபம் கொண்ட சிவபெருமான் விநாயகரின் தலையை துண்டித்தார். நடந்ததை கேள்விப்பட்ட பார்வதி, அதீத கோபம் கொண்ட மகா காளியாக உருமாறினார்.
காளியின் கோபம் பிரபஞ்சத்தையே அழித்து விடும் என்பதால், தன்னுடைய தவறை உணர்ந்த சிவபெருமான், துண்டித்த தலையை ஒன்று சேர்க்க முடியாது என்று ஒரு விலங்கின் தலையை கொண்டு வந்தால் மீண்டும் விநாயகருக்கு உயிர்ப்பிக்க முடியும் என்று ஒரு யானையின் தலையை கொண்டு வந்து விநாயகருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இது, பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறவி எடுப்பது என்ற சுழற்சியைக் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!