ஜோதிடம் படி, சில ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய துணைவழி உறவுகளுடன் ஒத்துப் போகாதாம் அவர்கள் யார் தெரியுமா?
உங்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சரியான மனமும், ஜாதகமும் அமைவது மிகவும் முக்கியம் ஆகும். இதுபோலவே கணவன் மனைவி வழி உறவினர்களுடான பொருத்தமும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. பொதுவாகவே கணவன்-மனைவி இருவருக்கும் தங்களது மாமி மாமனாருடன் ஒத்துப்போகவே, போகாது. அதுவும் சில ராசிகளுக்கு அவர்களுக்கு அவர்களின் கிரக பலன்களின் படி, கணவன்-மனைவி வழி உறவுனவர்களுடன் ஒத்துப்போகாது. சொல்லப்போனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் உண்டு. அந்த வகையில் இவர்களது குணத்தால் நெருங்கிய உறவினர்களுக்குள்ளே பிரச்சனைகளை வழிவகுக்கும். அந்த வகையில் 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் தங்களுடைய வாழ்க்கைத் துணையின் உறவினர்களுடன் ஒத்துப் போகாது. அவர்கள் யார் என்பது இங்கு பார்க்கலாம்ம்
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் சுதந்திரமான குணத்தை உடையவர்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் முன்னிலை வகிக்க ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். இவர்கள் எப்போதும் தங்கள் செய்யும் விஷயங்களில் உறுதிப்படுத்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள் இருந்தாலும் இவர்களது மன உறுதியை பல சமயங்களில் சிலர் வேறு மாதிரியாக எடுத்துக் கொள்வது உண்டு. சொல்லப் போனால் பிற்போக்கு தனமாக யோசிக்கும் மாமியார்களுடன் இவர்களுக்கு ஒருபோதும் செட் ஆகாது. ஆனாலும், கொஞ்சம் பொறுமையாக இந்தால், அவர்கள் தங்கள் கணவர் வழி உறவினர்களுடன் உறவை சுமூகமாக கையாளுவார்கள்.
ரிஷபம்: இந்த ராசி சனி கிரகத்தால் ஆளப்படுவதால் எவ்வித தடையுமின்றி இவர்களுக்கு காதல் கணவர் கிடைக்கும். ஆனால் இவர்களது கணவர் வழி உறவுகளுடன் இவர்கள் ஒத்துபோவது மிகவும் கடினம். சொல்லப்போனால் இரு வீட்டாரின் உறவினர்களுக்கும் ஒரு சில விஷயங்கள் மட்டுமே பொதுவாக இருக்கும். சில சமயங்களில் சண்டைகள் கூட வரலாம். எனவே, கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது
மிதுனம்: இவர்கள் தங்களது திறமையை பலரும் முன்னிலையில் வெளி கட்டுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டார்கள். இவர்கள் சிறந்த பேச்சாளர்கள் என்பதால், இது இவர்களது வாழ்க்கைத் துணை வழி உறவுகளுடன் சில சமயத்தில் மனக்கசப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இவர்களுக்கு அமைதியை விரும்பும் மாமியார் மற்றும் மாமனாருடன் ஒத்துப்போகாது. எனவே நீங்கள் எப்போதுமே பேசிக் கொண்டிருக்காமல், மற்றவர்கள் பேசுவதையும் கொஞ்சம் கவனித்தால் உறவு வலுவாக இருக்கும்.
சிம்மம்: இவர்கள் தலைமை உணர்வு மற்றும் பிறரை கவரும் திறன் கொண்டவர்கள். இது இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இந்த குணத்தை பல ரசித்தாலும் சிலருக்கு அது எரிச்சல் உணர்வை தூண்டும். ஆகையால் இவர்களது துணைவழி உறவினர்களுடன் ஒத்துப்போகாது. எனவே, நீங்கள் கொஞ்சம் தன்மையாக நடந்து கொண்டால் உறவில் மனக்கசப்பு ஏற்படாது.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் தங்களது உண்மையான முகத்தை எளிதில் காட்ட மாட்டார்கள். இவர்களைப் பார்க்கும்போது இவர்களுக்குள் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்து இருக்கிறது என்ற எண்ணம் தோன்றும். இதனால் இவர்களது கணவன் அல்லது மனைவி வழி உறவுகளுடன் ஒத்து போகாது. மேலும் அந்த உறவினர்கள் பலர் இவர்கள் மீது பல சமயங்களில் கோபப்படுவது உண்டு. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் இவர்களுக்குள் இருக்கிறது. இந்த எண்ணத்தால் தான் உறவுக்காரர்கள் கோபப்படுகிறார்கள். எனவே விருச்சக ராசிக்காரர்களே உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றி மற்றவர்களுடன் பேச கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் தங்களது உறவை விட கனவு மற்றும் லட்சியமே உயர்வாக எண்ணுவர். இந்த எண்ணத்தை இவர்களது நெருங்கி உறவினர்கள் விரும்புவதில்லை, ஆனால் பலர் விரும்புவர். இந்த எண்ணமானது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்பதால், இவற்றை நீங்கள் தவிர்த்து உறவினர்களுக்கு கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள்.